கல்வி கற்பதற்காக இந்தோனேஷிய மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா(Java) காடுகளில் 100 அடி நீள தொங்கு பாலம் ஒன்று உள்ளது.
இந்த தொங்கு பாலத்தில் ஒரு அடி அகலத்திற்கு குறுகிய மரப்பலகை காணப்படுகிறது. இந்த பாலத்தை கடந்து தான் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
இதனால் தினமும் இரு வேளைகளும் தங்கள் உயிரை பணயம் வைத்தே மாணவ செல்வங்கள் பாலத்தை கடந்து சென்று கல்வி கற்று வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இரு முனைகளில் இருந்து யாரும் புறப்பட முடியாத வகையில் இந்த பாலமானது ஒரு வழி பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு கம்பியை பிடித்தவாறே மாணவர்கள் தங்கள் சைக்கிள்களை ஓட்டி, துணிச்சலுடன் பாலத்தை கடந்து சென்று கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது.








0 Comments