Subscribe Us

header ads

புதிய அரசியல் பாதையை உருவாக்க நல்ல தருணம் பிறந்துள்ளது : ரில்வின்


(க.கிஷாந்தன்)
 

புதிய அரசியல் பாதையை உருவாக்கும் நல்ல தருணம் தற்போது பிறந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


பதுளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரில்வின் சில்வா இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அநேக தரப்பினர் பல்வேறு கோஷங்களுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சிக்கு வந்த போதிலும் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை.
அத்துடன் அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்டுள்ள தரப்பினர் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.
பொதுத் தேர்தலுக்கு செல்ல அச்சம் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தோற்கடிக்க வேண்டியது மக்கள் மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கடமை என ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments