Subscribe Us

header ads

யாழ்ப்பாண பொண்ணு


யாழ் மீட்டும் கண்ணு
யார் என்று கேட்டது மனசு
யாவும் இவள்தான் என்றது காதல்

அவளை தேடித் தேடி போனேனே 
தேகம் சிலிர்க்க தேய்ந்தேனே
தீண்டும் தீயாய் அவள் நினைவுகள் - தேகம் 
தீண்டித் தீண்டி கொல்லுதே

என் காதலின் உருவம் நீயடி
என் இதயத்தை தீண்டுவது ஏனடி
என் விழியின் பார்வை நீயடி 
என் கனவினை திருடுவது ஏனடி

பாவை உன்னை பார்க்க வழியின்றி
பாதி ராத்திரி தூக்கம் கலைந்தேனே
ஏக்கம் கொண்ட மனதில்
தூக்கம் இன்றி தொலைந்தேனே 

என் கண்ணில் பட்ட அவளை 
எங்கே போய்த்தேடுவேன்
நல்லூரடி தேடி போனேன்
நா வரண்டு   மானிப்பாய் போனேனே
மனம் நொந்து மட்டுவிலிலும்
தேடிப்பார்த்தேன் மங்கயவளை

என் நெஞ்ம் கொள்ளை கொண்ட - அவள்
எங்கே வாழ்கிறாளோ
தென்மராட்சி தேடிப்போனேன்
வடமராட்சி சுற்றி வந்தேன்
வலிகாமத்தில் மீண்டும் - என் 
தேவதையைப்பார்த்தேனே
காதல் சொல்ல போனேன்
மீண்டும் வானவில்லாய்
மறைந்தே போனாளே

நல்லூர் முருகா வரம்தா முருகா
என் தேவதை அவளை கண்ணில் காட்டு முருகா 
இல்லை என்றால் நான் வல்லிபுரம் போகின்றேன்
பெண்கள் நெஞ்சம் கொள்ளை கொண்ட
மாதவன் அவனிடம் வரம் கேட்கிறேன்

அவள் முகம் பார்த்திட 
உயிரின் அணுவும் துடிக்குதே
காதல் காய்சலும் தீண்டுதே 
எங்கே போய் அவளைத்தேடுவேன் 
என் காதல் தேசத்தில் வாழ்ந்திட...

-எஸ்வீஆர்.பாமினி

Post a Comment

0 Comments