Subscribe Us

header ads

பட்டம் முடிக்கும் தோழனே.......!

 
பட்டம் முடிக்கும் தோழனே.......!

பட்டம் முடித்து - பலருக்கு
சட்டம் போடலாமென்று
கட்டம் கட்டமாக - தினமும்
திட்டம் போடும் தோழனே,,,,!

இறைவனை மறந்துவிட்டு
நான் என்ற ஆணவத்தால்
நீ ஆடிவிட்டால் - வாழ்க்கையில்
தோற்று விடுவாயடா!

கொஞ்சம் செவிமடு!!

படித்தவனாக இரு
பண்பு கெட்டவனாக இராதே!
போதிப்பவனாக இரு
போதைப் பொருள் கடத்துபவனாக இராதே!
சாதிப்பவனாக இரு
சாதி பேதம் பார்ப்பவனாக இராதே!

கள்ளம் இல்லாதவனாக இரு - இரக்க
உள்ளம் இல்லாதவனாக இராதே!
கடவுளை நேசிப்பவனாக இரு
காடயரை போசிப்பவனாக இராதே!

தந்தைக்கு தலை வணங்குபவனாக இரு
தடி எடுப்பவர்களுக்கு தலைவனாக இராதே!
நல்லதை நாடுபவனாக இரு - அது
அல்லாததை தேடுபவனாக இராதே!

குணத்தை பார்ப்பவனாக இரு - உயர்
குலத்தைப் பார்ப்பவனாக இராதே!
ஒற்றுமைக்கு உறு துணையாக இரு
வேற்றுமைக்கு வேலியாக இராதே!

மண்ணை நேசிப்பவனாக இரு - பிறர்
பெண்ணை தூசிப்பவனாக இராதே!
இரக்கம் படைத்தவனாக இரு - இதயம்
இருள் படிந்தவனாக இராதே!

மொத்தத்தில் தோழனே,,,.!

இறைவனை வணங்கி வாழப்பழகு,
பிறரோடு இணங்கி வாழப்பழகு,
இல்லாதோர்க்கு வழங்கி வாழப்பழகு,,,

வாழ்க்கையில் ஒளி பிறக்கும்
மக்களுக்கு நல்ல வழி பிறக்கும்!!
என்று கூறி,,,,,,,,

நட்புடன் நலம் நாடும்,
அரபாத் காசிம்.

Post a Comment

0 Comments