பாறுக் சிகான்
வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனை மக்கள் பணிமனை தலைவரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான சுபியானின் தலைமையிலான குழுவினர் சந்தித்து உரையாடினர்
இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றபோது யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆராயப்பட்டன.
அத்துடன் மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக முதலமைச்சருடைய தலைமையில் ஒஸ்மானியாக்கல்லூரியில் மின விரைவாக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சரிடம் சுபியான் மௌலவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதில் வடமாகாண அமைச்சர்கள் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் வடமாகாண சபையின்மூலம் உதவக்கூடிய வேலைத்திட்டத்தை அதில் முன்னெடுக்குமாறு வேண்டிக் கொண்டார்.
இதன்போது கோரிக்கையை செவிமடுத்த முதலமைச்சர் தான் இக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் இம்மாதத்திற்குள் புதிய வருடத்திற்குப் பின் இதற்கான ஏற்பாட்டை தான் செய்வதாக உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பில் கலில் ஹாஜியார் எம்.சுவைஸ் எம். ஆஸிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


0 Comments