பி. முஹாஜிரீன்
பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழக வீரர்களுக்கான ஒரு நாள் வதிவிட தலைமைத்துவப் பயிற்சி நெறி நேற்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.
அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உளநல ஆலோசனை அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.ஆப்தீன் தலைமையில் நிந்தவூர் பிரின்ஸ் தோட்ட வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம். அஸ்லம் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில், உளவளத் துணையாளர் டாக்டர் ஏ. நஸ்லீன் ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர். இங்கு அஷ்ஷெய்க் ஏ.ஆர். றமீன் (மதனி) குத்பா பேருரை நிகழ்த்தினார்.
மேலும், இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அல் அறபா விளையாட்டுக் கழகத்திற்கான உத்தியோகபூர்வ மேலங்கியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.











0 Comments