Subscribe Us

header ads

மசுமு பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்பட வேண்டும் இல்லாவிடின் புதிய கூட்டணி உருவாக்கப்படும்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுறுவுதைத் தான் விரும்பவில்லையென கட்சித் தலைமைப்பொறுப்பை ஜனாதிபதி மைத்ரிபாலவிடம் ஒப்படைத்துச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட விமல் வீரவன்ச, வாசுதேவ, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்தன கூட்டணியில் மேலும் பல சு.க அதிருப்தியாளர்கள் இணைந்து கொண்டுள்ளதனால் தாம் சக்தி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கும் மஹிந்த ஆதரவு அணி எதிர்வரும் தேர்தலில் ஐமசுமு பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்பட வேண்டும் இல்லாவிடின் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெற்ற 58 லட்சம் வாக்குகள் அவருக்கு கிடைத்த தனிப்பட்ட விருப்பு வாக்குகள் எனும் அடிப்படையிலேயே மஹிந்த அணியின் செயற்பாடுகள் அமைந்திருக்கும் அதேவேளை சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியின் பலத்தினாலேயே மஹிந்தவுக்கு வாக்குக் கிடைத்தது எனவும் அது அவருக்கான தனிப்பட்ட அங்கீகாரம் இல்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டிசில்வா சுட்டிக்காட்டியிருந்தார்.
இதுவரை நேடியாக தனக்குத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருப்பது பற்றித் தெரிவிக்காவிடினும் மறைமுகமான நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டுவரும் மஹிந்த ராஜபக்ச, இறுதி வரை சு.க வாக்கு வங்கியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியைக் கைவிடப்பபோவதில்லையென அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை புதிய கூட்டணியொன்றை அமைத்து மைத்ரி அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என மஹிந்த ஆதரவு அணி அழுத்தம் கொடுத்து வருவதாக அறியமுடிகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் எப்படிப் பார்த்தாலும் இதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தப் பாதகமுமில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments