Subscribe Us

header ads

மனித மாமிசத்தை உண்ணும் சுறாக்களை வளர்த்த கோத்தபாய! அதிர்ச்சித் தகவல்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள மாளிகை குறித்து பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.
அந்த மாளிகையில் மனித மாமிசத்தை உண்ணும் சுறா மீன்கள் வளர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கோத்தபாய ராஜபக்ச மிகவும் ஆடம்பரமாக குறித்த மாளிகையை வடிவமைத்து அதில் வசித்து வந்துள்ளார்.
இந்த மாளிகையில் அவர் சட்டவிரோதமாக வளர்த்த இரண்டு குட்டி யானைகளும் இருந்தன. யானை குட்டிகளுக்கான இடமும், சுறா மீன்களுக்கான பாரிய தொட்டிகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
சுறா மீன்கள் வளர்க்கப்பட்ட தொட்டி 40 நீளமும் 10 அகலமும் 8 அடி ஆழமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மீன் தொட்டிக்கான கண்ணாடி வெளிநாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொட்டியில் சில சுறா மீன்கள் இருந்ததாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனித மாமிசங்களை உண்ணக் கூடிய சுறா மீன்களை வளர்க்க சாதாரண பிரஜைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அவற்றை பராமரிக்க பெருந்தொகை பணம் செலவாகும்.
இந்த சுறாக்களுக்கு உணவாக தினமும் சுமார் 50 கிலோ கிராம் இறைச்சி வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது. இப்படியான நிலைமையில் கோத்தபாய ராஜபக்ச இந்த சுறாக்களை வளர்த்து வந்தமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சுறா மீன்களை பராமரிக்க கடற்படையின் தனியான அணி ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை அடுத்து இந்த சுறாக்கள் கடற்படையினர் கொண்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

Post a Comment

0 Comments