கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் புத்தளம் நகர மத்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து
அனுராதபுரத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக கடல் நீரேரியின்
மத்தியில் பாரிய மின்வலு கொண்ட மின் கம்பங்கள் நாட்டுவதனை எதிர்த்தே இந்த
போராட்டம் மீனவர்களால் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மின் திட்டத்தை ஏற்கனவே
நிறுத்தக்கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும்
இந்த ஆட்சியிலாவது இத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்
எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




0 Comments