-பாருக் சிஹான்-
வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையான இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் குறித்த மகஜரொன்றை வட மாகாண மீன்பிடி அமைச்சரர் பா.டெனிஸ்வரன் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோருக்கிடையில் விசேட ஒன்றுகூடலொன்று நேற்று இடம்பெற்றது.
குறித்த ஒன்றுகூடலின்போதே வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விசேட ஒன்றுகூடலில் “எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளால் மீனவர்கள் தினந்தோறும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் எமது மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் எமது கடல் வளம் நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதை தடுக்கும் செயல்த்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இவ்வொன்றுகூடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணத்தின் மீனவர் சமாசங்களின் தலைவர்கள் மற்றும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments