Subscribe Us

header ads

ரஷ்ய இழுவைக் கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி; 15 பேரைக் காணவில்லை


ரஷ்ய இழுவைக் கப்பலொன்று கம்­சட்கா தீப­கற்­பத்தில் விபத்­துக்­குள்­ளாகி மூழ்­கி­யதில் அதில் பயணம் செய்த 54 மாலு­மி­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அந்தக் கப்பல் பய­ணித்த 65 பேர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.அதே­ச­மயம் 15 பேர் காணாமல் போயுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.மேற்­படி டால்னி வொஸ்டொக் கப்பலில் விபத்து இடம்­பெற்ற வேளை 132 பேர் பயணம் செய்­துள்­ளனர்.
அவர்­களில் 78 ரஷ்­யர்­களும் 42 மியன்மார் பிர­ஜை­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். ஏனை­ய­வர்கள் வணு­வத்து, லத்­வியா மற்றும் உக்ரேன் ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.
அந்தக் கப்பல் புதன்­கி­ழமை குறு­ரோ­கொ­ரோவ்ஸ்கி பிராந்­தி­யத்தின் மேற்கே 330 கிலோ­மீற்றர் தொலை வில் ஒகொட்ஸ்க் கடலில் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

இறந்­த­வர்­களில் அந்தக் கப்பலின் கப்­டனும் உள்­ள­டங்­கு­வ­தாக தெரி­விக்­கப் ­ப­டு­கி­றது.இந்­நி­லையில் காணா­மல்­போ­ன­வர்­களை தேடும் பணியில் 26 மீட்புக் கப்­பல்கள் சகிதம் மீட்புப் பணி­யா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளனர்.
எனினும் கடல் கொந்­த­ளிப்பு மற்றும் உறைய வைக்கும் குளிர் கார­ண­மாக மீட்புப் பணிகள் தாம­த­மா­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.இந்த கப்பல் விபத்துக்கான காரணம் தொடர்பில் தற்போது எதனையும் உறுதி யாகக் கூறமுடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments