பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை பாஹிம் ஜூவலரியின் தயாரிப்பில் உருவான கல்வியா ? காதலா ? திரைப்படத்தின் இறு வெட்டு வெளியீட்டு விழா இன்று மாலை (03-04-2015)கவிஞர் இக்பால் கலைக்கழகத்தின் ஏற்;பாட்டில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
கவிஞர் இக்பால் கலைக்கழகத்தின் தலைவரும் உதவி இயக்குணருமான எம்.எம்.முகம்மட் முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி; பிரதம அதிதியாகக் கலந்த கொண்டு இறு வெட்டை வெளியீட்டு வைத்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஆரிப் சம்சுதீன் ஆகியோர் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர். முதல் இறு வெட்டை மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீpர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இத்திரைப்படம் பற்றி எழுத்தாளர்களான உமாவரதராஜன்,சத்தார் எம் பிர்தௌஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். வசந்தம் தொலைக் காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப்,பிறை எப்;.எம்.அறிவிப்பாளர் எம்.ஏ.நஸிர் ஆகியோர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக நிகழ்வச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். ஊரின் முக்கியஸ்த்தர்கள் உள்ளீட்ட பெரும் அளவிலான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.




0 Comments