Subscribe Us

header ads

பசிலைப் பார்க்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற கோத்தபாய

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை,அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்ச பார்வையிடச் சென்றுள்ளார்.
இன்று இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான கோத்தபாய ராஜபக்ச அங்கிருந்து வெளியேறி வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகோதரரான பசில் ராஜபக்சவை பார்க்கச் சென்றுள்ளார்.
இதனால், இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் போராட்டம் நடத்தி வந்த தரப்பினர் வெலிக்கடைச் சிறைச்சாலையை நோக்கி செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாயவுடன் ஒரு தொகுதி ஆதரவாளர்களும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். எவ்வாறெனினும் கோத்தபாய ராஜபக்ச மட்டும் சிறைச்சாலைக்குள் சென்றதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களான கோத்தபாய மற்றும் பசில் ஆகிய இருவருக்கு எதிராகவும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments