Subscribe Us

காத்தான் குடி நகரத்திற்குள் செய்ய வேண்டிய சேவைகள் கிழக்கு முதலமைச்சர் தலைமையில் நேற்று இனங்காணப்பட்டது


இலங்கை அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ்  நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலைமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  கோரிக்கைக்கு அமைவாக நேற்று  காத்தான்குடி நகருக்கு  கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், அலி ஷாஹீர் மெளலானா, நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் யூ.எல்.எம்.எல்.முபீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் ஆகியோருடன்,
 
இன்றைய விஜயத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் சார்பாக பிரிகேடியர் ஜே.எம்.எஸ்.எஸ்.ஜயசுந்தர, கேர்ணல். சிட்சிறி, மேஜர். குணசேன, திட்ட பணிப்பாளர் மகிந்த விதாரண, பிரதிப்பணிப்பாளர். சோமரத்ன, ஆகியோரும் பயணம் செய்தனர்.

நேற்றய விஜயத்தின் போது:

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் நகர அபிவிருத்தி நீர்வழங்க வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் முபீன் ஆகியோர் திருத்தப்படவேண்டிய, மற்றும் புதிதாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை முதலமைச்சர் மற்றும் நகர அபிவிருத்திக் குழுவினரிடமும், காண்பித்தனர்.

காத்தான்குடிக்கான பஸ் தரிப்பு நிலையம், விக்டரி பொது மைதானம், கடற்கரை அழகுபடுத்தல், ஆற்றங்கரைப்பூங்கா அமைத்தல், சிறுவர்கள், மற்றும் பெண்களுக்கான தனியான பூங்கா அமைத்தல், பூநொச்சிமுனையில் நீர் பூங்கா அமைத்தல், அத்துடன் மழை நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோட முக்கியமான வடிகான்களை அமைத்தல் போன்றன காண்பிக்கப்பட்டன.

மேற்குறித்த வேலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இதனை அவசரமாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையினரைக் கேட்டுக்கொண்டார்.

இப்பயணத்தில் பொதுமக்களும், நிருவாகத்தினர்களும் கலந்து கொண்ட இன்றைய நிகழ்வுக்கு கத்தான்குடி நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொள்ளாதது  கவலையளிக்கிறது. ஊருக்கான சேவைகளில் சகலரும் கட்சி பேதமின்றி கலந்து ஆலோசனை வழங்கி வேலைகளை செய்ய முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் குறிப்பிட்ட நிகழ்வில் சுட்டிக்காட்டினார். என்பதும் குறிப்பிடத்தக்கது.













Post a Comment

0 Comments