சம்மாந்துறை சென்னல் ஸாகிறா மஹா
வித்தியால மாணவர்கள் கல்வியில் பின் தங்கிக் காணப்படும் நிலையினைக் கருத்திற்
கொண்டு Forum for Development (FODE) எனும்
கழகத்தின் ஏற்பாட்டில் 2015 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் எழுதவிருக்கும் மாணவர்களிற்கு 8 மாத கால
கணிதப் பாட செயற்திட்டம் ஒன்றினை நடாத்த முடிவு செய்துள்ளது.இப் பாடசாலையில்
சாதாரண தரத்திற்கு தோற்றும் மாணவர்கள் ஏனைய பாடங்களினை விட குறைவாக சித்தியடைவதும்,சித்தியடையும்
வீதம் 40-50 இருப்பதனையும் கருத்திற் கொண்டே இவ் அமைப்பினால் இச் செயற்பாட்டினை
முன்னெடுக்கப்படுகிறது.
இச் செயற்திட்டம் மூலம் உயர் தரத்திற்கு தேர்வாகும் மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு,விஞ்ஞானத் துறைக்கு தேர்வாகும் மாணவர்கள்
எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இச் செயற்திட்டத்தில் பங்கு
கொள்ளும் மாணவர்கள் ஒவ்வொருவரும் பயனடையத் தக்கவாறு பல புத்தி ஜீவிகளின் ஆலோசனை
உள்வாங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளமை இச்
செயற் திட்டத்தின் மேலுமொரு சிறப்பம்சமாகும்.எனினும்,இச் செயற் திட்டத்தினை
மேற்கொள்ள 50151 ரூபாய் அளவில் தேவைப்படுகிறது.முடிந்தவர்கள் இதற்கு தங்கள் உதவிகளினை
செய்வதன் மூலம் இச் செயற்திட்டத்தில் பங்கு கொள்ளுமாறு இவ் அமைப்பு கேட்டுக்
கொள்கிறது.தொடர்புகளுக்கு tel :0767866568,0777866568.mail:acra.acra619@gmail.com.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை


0 Comments