முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும்
நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள்
பி.பி.ஏக்கநாயக்க மற்றும் குமார வெலகம ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவாரா? என்று குமார வெல்கம கேட்டபோது, அவரை போட்டியிட முடியாது என்று யார் கூறியது? மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடலாம் என்று மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்ச மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமையால் அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூலம் போட்டியிட முடியாது என்று மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுபான்மையினங்களும் மஹிந்த ராஜபக்சவை விரும்பவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மேதின அழைப்புக்கள் தொடர்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம், நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய விஹாரை கட்டடத்தில் அமைந்துள்ள நிலையில், அந்த விஹாரையின் தலைமை பிக்குவான முருத்துவட்டுவே ஆனந்த தேரரும் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த பேச்சு நடத்தியுள்ளார்.

0 Comments