Subscribe Us

header ads

பதவியிலிருந்து நீக்கினாலும், நான் செத்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் வாலாக மாட்டேன் - பந்துல


பதவியிலிருந்து நீக்கினாலும், நான் செத்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் வாலாக மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செய்தி சேவை ஒன்றிற்கு நேற்று இரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து என்னை நீக்கிவிட்டதாகவும், மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக நான் செயற்படுவதாகவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்த பின்னர் தமக்கு தேவையில்லை என எண்ணும் உறுப்பினர்களை வேட்டையாடும் முதற்கட்டமே எனது பதவி நீக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர், உறுப்பினர் பதவிகள் இல்லை என்றாலும் நாடு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அப்பாவி மக்களுக்கு துணையாக நான் இருப்பேன் எனவும் செத்தாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய மாட்டேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments