முத்தூரை மீட்டெடுக்க புறப்படு சகோதரா!!
என் அன்பார்ந்த முத்தூர் உடன் பிறப்புக்களே!
எம் மண்ணை விட்டு வெளியேறி இருபத்தைந்து
ஆண்டுகால வரலாறு, இதிகாசங்களில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளை,
மீள் குடியேற்றம் பலருக்கு தோல் கொடுக்கிறது
என்று தம்பட்டம் அடிக்கும் இவ்வேளை,
எம் பாட்டன் காடு வெட்டி மேடு தட்டி முசலி மண்ணுக்கு பெருமை சேர்த்த முத்தூர் மண் மட்டும் ஏன் இன்னும், அரசபடை ஆக்கிரமிப்பில் அடி பணிந்து கிடக்கிறது??
வரலாறுகள் வடிக்கப்படுகின்றன, அதன் துன்பங்கள் தொகுக்கப்படுகின்றன. ஆனாலும்
சகோதரா!! எம் முத்தூர் மட்டும் முடங்கிக் கிடக்கிறது.
இனியும் பொறுமை வேண்டாம் சகோதரா!!
நாடுமன்றத்தில் எம் மண்ணின் நாயகர்கள் இருக்கிறார்கள். நாட்டை ஆளும் கட்சிகளில் எம் பிரதேச பட்சிகள் இருக்கிறார்கள்.
இருந்தும் என்ன பயன்??
சந்தர்ப்பம் நெருங்குகிறது சகோதரா! அவர்கள் கைகள் வலுவிழக்கும் தருணம். உன் வாக்குரிமைக்கு வலு பிறக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்சி விடாதே!
உன் வாக்குரிமைக்கு எம் வாழ்விடத்தை கேள்.

என் தலைவன் என் தலைவன் என்று எகிறிக் குதிக்கும் எடுபிடிகளே!
உன் தலைவனிடம் சொல்,,
எம் மண்ணை மீட்பதற்கு இதுதான் தருணம் என்று உரத்துக்கூர்!
கட்சி பேதமின்றி எவன் ஒருவன் எம் மண்ணை மீட்டுத்
தருகிறானோ அவனே என் தலைவன் என, முத்தூர்
முதுகெலும்புள்ளோர் கூறட்டும், நானும் உன் தலைவனுக்கு
தலை வணங்குகிறேன்.
முத்தூரின் சொத்துக்களே!
உன் வாக்குரிமையை கேட்டு வாசல் வரும் ஒவ்வொரிடமும்
இதை நீ உரிமையோடு உரத்துக் கேளடா!
ஏறு பிடித்த உன் கைகளிலே
சேறு சகதியினால் ரேகை அழிந்திருக்கலாம்
வலை படிந்த உன் தோள்களிலே- உன்
நிலை குலைந்து வலு இழந்திருக்கலாம்
ஆனாலும் முத்தூரானே!!
உன் மூச்சு இன்னும் ஓயவில்லை.
எம் முத்தூரை முழுமையாக மீட்டெடுக்க
முன்னெடுப்பாய் முயட்சினை,,,,,!
முத்தூரான்,
அரபாத் காசிம்.

0 Comments