Subscribe Us

header ads

ஏறாவூரில் இலவைப்போடி வீதிக்கான வடிகான் அமைப்பை ஆரம்பித்தார் முதலமைச்சர்

புதிய அரசின்  100 நாள் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கமநெகும கிராமத்துக்கு ஒரு வேலை இன்று ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  மற்றும் விஷேட அதிதிகளாக ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.ஐ.தஸ்லீம், நகரசபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம்
நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நஸீர் ஆகீயோரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் இலவைப்போடியார் வீதி வடிகான் அமைப்பிற்கான  ஆரம்ப வேலையினை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வுக்கு அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 




 

Post a Comment

0 Comments