சிறிலங்கன் விமான சேவை நிறுவன்தின்
முறைகேடுகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் விசாரணை அறிக்கை
மூலம் பல பில்லியன் ரூபா முறைகேடும் அதிகார துஷ்பிரயோகமும்
இடம்பெற்றிருக்கின்றமை குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருந்த
நிலையில் சிறிலங்கன் விமான சேவைப் பெண் ஊழியர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின்
தனிப்பட்ட சேவைக்காக நியமிக்கப்பட்டமை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித்
வீரதுங்கவின் வேண்டுகோளுக்கமைய குறித்த பெண் ஊழியர் ஜனாதிபதி செயலகத்தில்
பணியிலமர்த்தப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கு மேற்கொண்ட கடமைகள் அல்லது
பணிகள் குறித்த எதுவித தகவலும் இல்லையெனவும் சிறிலங்கன் எயார்லைன்ஸ்
நிறுவனத்திலிருந்து அவருக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட சம்பளம் போக மேலதிகள
4.2 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருப்பதாகவும் இவற்றிற்கான காரணமோ அது
பற்றிய ஆவணமோ இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிரவும் நிறுவனத்தின் தலைவராக இருந்த
மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் நிசாந்த விக்ரமசிங்க தனக்குப் பிடித்தமான
பெண் ஊழியர் ஒருவரை நிர்வாக செயற்குழுவின் அனுமதியின்றியே நிறுவனத்தின் ஆக
நியமித்து அதன் மூலம் பெரும் பொருட்செலவையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியதோடு
அவரோடு நெருங்கிய உறவைப் பேணுவதன் மூலம் பலர் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும்
ஈடுபட்டு வந்தமை குறித்தும் சட்டத்தரணி ஜே.சியின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments