Subscribe Us

header ads

சக மனிதர்களுக்காக இரவு முழுவதும் பிரார்த்தனை நடத்திய நேபாள மக்கள்

நேபாளத்தில் கடந்த 81 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் இதுவரை 1800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு நேபாள நாட்டின் வீதிகளில் கூடிய பொதுமக்கள் இறந்தவர்களுக்காகவும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களுக்காகவும் மனமுருகி பிரார்த்தனை நடத்தினர். இயல்பாகவே இசைப் பாரம்பரியம் கொண்ட அம்மக்கள், இசைக்கருவிகளைக் கொண்டு பக்திப் பாடல்கள் பாடி இரவு முழுவதும் இறைவனைத் தொழுதனர்.

Post a Comment

0 Comments