கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாடுபூராகவுமுள்ள 16 மத்திய நிலையங்களில் இவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 30ம் திகதி வரை விண்ணப்பதாரிகள் இதனை பெற்றுக் கொள்ள முடியும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பரீட்சைக் கட்டணமாக 3252 ரூபா அறவிடப்படும் என்பதோடு, விண்ணப்பங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 18 தொடக்கம் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் குறித்த பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த வருடத்திற்கான கொரிய மொழி பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 13ம், 14ம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments