7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1800 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 4700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற
அச்சத்தினால் மக்கள் இரவிலும் இருப்பிடங்களுக்கு திரும்பாமல் வீதியில்
தஞ்சமடைந்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பெரும் அழிவு ஏற்பட்டிருப்பதாக
தெரிவித்துள்ள நேபாள அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியிருந்தது,
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முதற்கட்டமாக வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நோர்வே அரசாங்கமும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அத்துடன் ஜேர்மன் இஸ்ரேல் பிரான்ஸ் மற்றும் ஸபெயின் நாடுகளும் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளன.
இதேவேளை இந்தியாவின் வட பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 44 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


0 Comments