கடந்த அரச காலத்தில் பொது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருந்த மற்றும் முக்கிய பிரமுகர்களைக் கடத்திய அல்லது அவர்கள் காணாமல் போக காராணமாகயிருந்த வெள்ளை வேன் கலாசாரத்தின் தந்தை கோத்தபாய ராஜபக்ஷ என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இதன் கோட் ஃபாதர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது மோசமான சில நடவடிக்கைகளுக்கு அவர் தன்னையும் பயன்படுத்திக் கொண்டதாகவும் மேர்வின் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணலொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments