Subscribe Us

header ads

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதில் மகிழ்ச்சி : குமார் தர்மசேன


உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சியென  குமார்  தர்மசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின்  நடுவர் குமார் தர்மசேன இடம்பெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்டார்.
இதன் மூலம் உலகக்கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒருவர் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நடுவராக செயல்படுவது இதுவே முதன்முறையாகும். அதற்குரிய பெருமையை குமார் தர்மசேன பெற்றார்.
இது தொடர்பில் குமார் தர்மசேன கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
இந்த நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில் இருந்து சர்வதேச போட்டியின், அதுவும் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் நடுவராக செயற்பட வாய்ப்பு கிடைத்தமை எனக்கு கிடைத்த பாக்கியம்.
அதேநேரம் வெற்றி பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நான் விளையாடியிருந்தேன். இம்முறை நாட்டிற்காக உலகக்கிண்ணத்தில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் ஒரு அதிகாரியாக, நடுவராக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி.
மொத்தமாக சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக செயற்பட 12 பேர் இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில காலங்களாக நான் தான் முதலிடத்தில் இருந்தேன். அதனால் எனக்கு இந்த வாய்ப்பு குறுகிய காலத்தில் கிடைத்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments