Subscribe Us

header ads

விமல் வீரவன்ச விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகழ்பாடுவார்: சரத் பொன்சேகா ஆருடம்


விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்தும் விமல் வீரவன்ச புகழ்பாடுவார் என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தன் வயிற்றை குறித்து மாத்திரம் சிந்திக்கும் ஒருவரே விமல் வீரவன்ச என அவர் கூறியுள்ளார்.
விமல் வீரவன்ச தனிப்பட்ட இலாபத்திற்காக எவ்வாறு வேண்டுமென்றாலும் பொய் சொல்ல கூடிய ஒருவராவார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு போன்றே பிரதமர் ரணில் விகரமசிங்கவிற்கும் விரைவில் புகழ்பாடுவார் என்பது புதுமைபட வேண்டிய விடயமல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments