அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற இரண்டு
ஆர்ப்பாட்டங்களின் போது மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகள்
பகிர்ந்தளிக்கப்பட்டமை சூழ்ச்சியாக இருக்கக் கூடும் என முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலஞ்சம்,
ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிராக
நாடாளுமன்றத்திற்கு எதிரில் ஒரு ஆர்ப்பாட்டமும், கோத்தபாய ராஜபக்ச அந்த
ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து மற்றுமொரு ஆர்ப்பாட்டமும்
நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் கைகளில் ஏந்தியிருந்த, தேசிய
கொடிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.
காலி கச்சவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கருத்து வெளியிட்டார்.
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


0 Comments