ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பஸ்கா பண்டிகையில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு போதகர் ஒன்றியம் இப்பண்டிகையை ஏற்பாடு செய்துள்ளது.
போதகர் ஒன்றியத்தின் தலைவர் குகன் இராசதுரை தலைமையில் நடைபெற்ற இப்பண்டிகை விழாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் அமீர் அலி உட்பட பல முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கெண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று ஆரம்பமாகிய இந்த பஸ்கா பண்டிகை நாளை வரை நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெறும் 3வது பஸ்கா பண்டிகை இதுவாகும். முன்னர் கொழும்பு கண்டி ஆகிய மாவட்டங்களில் இப்பண்டிகை இடம்பெற்றுள்ளன.

0 Comments