Subscribe Us

header ads

வடமாகாண ஆளுநருக்கு நன்றிதெரிவிக்கிறது வடக்கு முஸ்லிம் பிரகைகள் குழு.


அண்மையில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் யாழ்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாப் ஏ எச் ஜமால் மொஹிடீன் தலைமையில் யாழ் ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வடமாகாண ஆளுநர் திரு பளிகக்கார அவர்கள் 1990 ஆம் ஆண்டு இரண்டு மணி நேர அவகாசத்தில் யாழில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை ஒரு துன்பமான செயலாகும் என்றும் உங்கள் வேதனைகளையும் கவலைகளையும் தான் நன்கறிந்துள்ளதாகவும் கற்றுத்தந்த பாடங்கள் ஆணைக்குழுவில் தான் இரண்டு வருடங்கள் செவையாற்றியதனால் முஸ்லீம்களின் இழப்புகள் யாவும் தான் அறிந்துள்ளதாகவும் அதற்கான பரிந்துரைகளை வளங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது மீள்குடியேறி வாழும் மக்களுக்கான வீடமைப்பு, காணிப்பகிர்வு , சொத்தழிவு மற்றும்  இழப்பீடுகள், உஸ்மானியா கல்லூரி அதிபர் நியமனம் மஸ்ஜிதுல் அபூபக்கர் காணி உருதிப்பிரசினை சம்பந்தமாக உரிய அமைச்சுகளுடன் தொடர்புகொண்டு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இவரின் இந்த கூற்றானது வடக்கு வாழ் முஸ்லீம்களுக்கு பெரிதும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கின்றது. கொடிய யுத்தம் முடிந்து ஆறு வருடங்களாகியும் கூட புதிய ஆளுனரால் மட்டுமே இவ்வாறு உறுதி அளிக்க முடிந்துள்ளமை குறித்து வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறது என்று அவ்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மன்னார் நிருபர்)

Post a Comment

0 Comments