நியூசிலாந்தில் வருடத்திற்கு இரு முறை நடைபெறும் ’ஒமாகா கிளாசிக் பைட்டர்ஸ்’ ஏர்ஷோ நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல தரப்பட்ட விமானங்கள் பங்கு பெறும் இந்த சாகச நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ’விண்டேஜ் போக் வுல்ப் 190’ என்ற விமானத்தின் பிரேக் செயலிழந்து, தரையில் மோதிய அடுத்த நொடியே அதன் பாகங்கள் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்ற போது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக எந்த காயமுமின்றி விமானியான ’ப்ராங்க் பார்கர்’ நடந்து வந்தார். இதைவிட ஆச்சர்யமாக விபத்துக்குப் பின்னரும் கூட அவர் அந்த சாகச நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஆரம்ப கால விமானங்களில் ஒன்றான ’விண்டேஜ் போக் வுல்ப்’ விமானம், கிட்டத்தட்ட ஒரு கிளைடரைப் போலவே தோற்றமளிக்கும். என்ஜின் தவிர இந்த விமானத்தில் எந்த சிறப்பு வசதிகளும் கிடையாது.
இந்த விபத்து குறித்து இந்த சாகச விழாவின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரான கிரஹாம் ஆர்பன் கூறுகையில் “இது எங்களது மன அமைதியைக் குலைத்து விட்டது. ப்ராங்கின் மீது எந்த தவறும் இல்லை இது அரிதாக நடைபெறும் இயந்திரக் கோளாறுதான்” என்றார்.





0 Comments