Subscribe Us

header ads

ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதினுக்கு ரணில் இலஞ்சம்: ரஜீவ கடிதம்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு இலஞ்சம் வழங்கியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக விசாரணை மேற்கொள்வதென்றால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் அவ்வாறான குற்றச்சாட்டிற்கு எதிராக விசாரணை மேற்கொள்ள முடியும் என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு,தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக, அமைச்சர் ரவூப் ஹக்கிம் பணம் கேட்டதாக பிரதமர் ரணில் தன்னிடம் கூறியதாக, அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ரிசாத் பதியூதினிற்கு அமைச்சர் பதவி வழங்கியமைக்கான காரணம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கின்ற ஒப்பந்தத்தில் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவித்ததாகவும் அக்கடிதத்தில் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments