Subscribe Us

header ads

என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்


புதிய அரசாங்கம் தமது குடும்பத்தினரின் செயற்பாடுகளை உளவு பார்ப்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அத்துடன் தமது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் தமது உணவு சுவைப் பார்ப்பவர்கள் கூட தம்மை ஏமாற்றிவிட்டதாக ராஜபக்ச குற்றம்சுமத்தியுள்ளார்.
இவர்களே தமது நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்தரப்பினருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். இதன்காரணமாகவே கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வி ஏற்பட்து என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவர்கள் யாவரும் தமது கழுத்தை வெட்டிவிட்டதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டு தொடர்பில் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டரும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாதுகாப்பு அதிகாரியாகவும் செயற்படும் காவல்துறை அத்தியட்சகர் விக்கிரமசிங்க எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்று வெளிநாட்டு செய்தி சேவை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments