-AKM SIYATH-
வடக்கு முஸ்லீம்களின் பலவந்த வெளியேற்றம், அகதிப்பிரசினைகள், மீள்குடியேற்றம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு (NMCC) அவுஸ்திரேலிய தூதராலய உயரிஸ்தானிகர் ராபின் முடியுடன் விரிவாக கலந்துரையாடியது.
இதில் தமிழ் முஸ்லிம் நல்லுறவுகள் பற்றியும் அவை எதிர்காலத்தில் சீர்செய்யப்படவேண்டிய தேவைப்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கபட்டது.
வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவர் அஷ்ஷைக் முபாரக் மெளலவி அவர்களின் தலைமையில் கூடிய மேற்படி சந்திப்பில் அஷ்ஷைக் பி. நிஹ்மத்துல்லா அவர்களினால் வடக்கு முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



0 Comments