Subscribe Us

header ads

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலை எதிர்த்து 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!


இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு தனது எல்லை மீறி செயற்படுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவரை தமது அலுவலகத்திற்கு வருமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
 ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Post a Comment

0 Comments