Subscribe Us

header ads

கணிதத்தில் 43% சித்தியடையவில்லை


Jasar Jawfer
2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட் சையில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் சித்தியடையவில்லை என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது, இலங்கையின் கல்வித் திட்டத்தில் கணிதம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்ைககளின் அடைவுகள் குறித்த அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

2,56,803 மாணவர்கள் கணிதப் பாடத்திற்கு தோற்றிய போதிலும் அதில் 1,11,198 மாணவர்கள் சித்தியடையவில்லை. இது கணிதத்திற்கு தோற்றிய மாணவர்களின் 43 % மாகும்.

கணிதத்தின் சித்தியடைவுக்கான எல்லைப் புள்ளிகளைக் குறைத்தல், மேலதிக செயற்பாடுகளை பாடசாலை மட்டத்திலும். வலய, மாகாண, தேசிய மட்டங்களில் நடைமுறைப்படுத்தல் முதலான வழிகளை கடந்த வருடங்களில் கல்வி அமைச்சு மேற் கொண்டிருந்தது.

கணிதப் பாடத்தில் சித்தியடையத் தவறிய மாணவர்களுக்கு இரண்டுக்கு குறையாத அமர்வுகளில் கணிதப்பாடத்தில் சித்தி பெற்றுத் தரும் வரை கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கற்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கணிதப் பாடத்தைக் கற்பது மற்றும் கற்பிப்பது தொடர்பாக காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாது நிலைமைகளைச் சாமாளித்தல் நீண்ட காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்பதி்ல் சந்தேகமில்லை.

Post a Comment

0 Comments