Subscribe Us

header ads

பேருவளையில் இருக்கும் ஹாஜியாரின் BMW வாகனத்திலேயே ராஜித செல்கிறார் -BBS

தூக்குமேடைக்கு அனுப்ப அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக ஆதாரங்கள்- BBS 


தற்போதைய சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவிற்கு போதைப் பொருள் கடத்தல் வியாபாரத்துடன் சம்பந்தமிருப்பதாகவும் தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கான ஆதாரங்கள் தம்வசம் இருப்பதாகவும்  ஞானசார ஊடகங்களுக்குத் தெரவித்தார்.

பாமன்கடையில் இருக்கும் கதிரேசன் என்பவருக்குப் பணம் கொடுத்து வடக்கே குண்டுகள் பொருத்திLTTE இணை போஷித்து வளர்த்திருந்ததாகவும் ஞானசார அமைச்சர் ராஜிதவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபாலாவின் ஆட்சிக்குள் இருந்துகொண்டு தமது அனைத்து மோசடிகள் குற்றங்களை மறைக்க அமைச்சர் ராஜித முற்படுவதாகவும் கூறியுள்ளார். அத்தோடு  அமைச்சர் ஒருவரினதும் மாறும் பல் வைத்தியரினதும் சம்பளத்தால் கப்பல்கள் வாங்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 எட்டுக் கப்பல்களை அமைச்சர் ராஜித புளு ஓசியன் நிருவாத்தின் பெயரில் வாங்கியுள்ளதாகவும் இதை பின்னர் சீனக் கம்பனி  வாங்கியதாகவும் கூறுவார் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் பேருவளையில் இருக்கும் ஹாஜியார் ஒருவரான அமைச்சரின் BMW வாகனத்திலே அமைச்சர் செல்வதாகவும் எத்துள் கோட்டைப் பிரதேசத்தில் மீன்பிடி நிலையத்திற்கு சொந்தமான சொத்துக்களை  அமைச்சர் சூறையாடி இருப்பதாகவும் புத்தளத்தில் இஸ்மாயில் என்பவரின் தம்பி மூன்று மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்ததாகவும், இவர் ஒரு போதைப்பொருள் வியாபாரி என்பதுடன் அவருக்குப் பின்னால் இருக்கும் அரசியல்வாதி அமைச்சர் ராஜித என்றும் அந் நபருடந்தான் நாடுகளுக்குச் சுற்றுப்பயணத்தை அமைச்சர் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

(BBSயினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்)

Post a Comment

0 Comments