Subscribe Us

header ads

2050 இல், உலக முஸ்லிம்கள்


முஸ்லிம் சனத்தொகையின் வேகமான வளர்ச்சியால் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டாகும் போது உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சனத்தொகை சமனி லையை நெருங்கும் என்று புதிய ஆய் வொன்று கணித்துள்ளது.

அமெரிக்காவின் பீவ் ஆராய்ச்சி மையம், மதங்கள் குறித்து நடத்திய ஆய்வு அறிக்கையிலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிறப்பு விகிதம், இளைஞர்களின் வளர்ச்சி வீதம் மற்றும் மதமாற்ற தரவுகளைக் கொண்டே இந்த ஆராய்ச்சி மையம் எதிர்வுகூறலை செய்துள்ளது.

'அடுத்த நான்கு தசாப்தங்களிலும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பெரும்பான்மையாக இருப்பார்கள். ஆனால் இஸ்லாம் ஏனைய அனைத்து பிரதான மதங்களை விடவும் வேகமாக வளர்ச்சிய டைகிறது" என்று அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி 2050 ஆம் ஆண்டாகும்போது உலகில் முஸ்லிம் சனத் தொகை 2.76 வீதமாக உயரும் என்பதோடு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.92 ஆக இருக்கும். 2010 ஆம் ஆண்டு கணக் கெடுப்புகளின் படி உலக முஸ்லிம் சனத்தொகை 1.6 பில்லிய னாக இருக்கும்போது கிஸ்தவர்கள் 2.17 பில்லியனாக இருந்தது.

'முஸ்லிம்களின் எண்ணிக்கை கிட்டத் தட்ட உலக கிறிஸ்தவர்களின் எண்ணிக் கையுடன் நெருங்கிவிடும்" என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இதன்படி உலக சனத் தொகையில் அடுத்த 40 ஆண்டுகளில் ஹிந்துக்கள் மூன்றாவது இடத்தில் இருப்பார்கள். இதன்போது அவர்கள் உலக சனத்தொகையில் 14.9 வீதமாக இருப்பார்கள். இதற்கு அடுத்து எந்த மதமும் அற்றவர்கள் உலக சனத் தொகையில் 13.2 வீதமாக இருப்பார் கள். இதன்படி உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடாக 2050 ஆம் ஆண்டில் இந்தியா மாறிவிடும் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தற்போது உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட நாடாக இந்தோனே'pயா காணப்படு கிறது. தவிர ஐரோப்பிய சனத்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த 40 ஆண்டுகளில் 10 வீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி வீதம் தொடர்ந்தால் 2070 ஆம் ஆண்டாகும் போது உலக சனத்தொகையில் கிறிஸ்தவர்களை தாண்டி முஸ்லிம்களே அதிகமாக இருப்பார்கள் என்று அந்த ஆய்வு கணித்துள்ளது.

Post a Comment

0 Comments