Subscribe Us

header ads

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட்டன: அஜித் பெரேரா...

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நியமிக்கும் போது பிரதமரிடம் அது குறித்து கேட்க வேண்டுமென்ற திருத்தம் எந்தவிதமான மாற்றமும் இன்றி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.
19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
அனைத்து சூழ்ச்சித்திட்டங்களையும் அரசாங்கம் பொறுமையுடனும் நிதானத்துடனும் கையாண்டு தோற்கடிக்கச் செய்துள்ளது.
அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன போன்றவர்கள் 19ம் திருத்தச் சட்ட விவாதத்தில் பங்கேற்ற விதத்தைக் கொண்டே அவர்களின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானது என அஜித் பெரேரா, நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments