முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்ச பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வீடுகளை தமது
உறவுகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் வழங்கிய சம்பவம் குறித்து விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த
அவர் மேற்கொண்டதாக கூறப்படும் இந்த நடவடிக்கை குறித்து பொலிஸ் நிதிமோசடி
குற்றப்பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த நிதிமோசடி விடயத்தில், சுமார் 60 மில்லியன் ரூபா அளவிலான பொதுமக்களின் நிதிகள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்பின்பேரில்,அவரின் முன்னாள்
பணிப்பாளர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


0 Comments