Subscribe Us

header ads

வினோத நோய் தாக்கி 104 வயது தோற்றத்துடன் இருந்த 17 வயது சிறுமி உயிரிழந்தாள்


வினோத நோய் தாக்கி 104 வயது தோற்றத்துடன் இருந்த 17 வயது சிறுமி இறந்தாள். அவரது மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்தில் ஈஸ்ட் சூஸ்செஸ் பகுதியில் உள்ள பெஸ்ஹில் என்ற இடத்தை சேர்ந்தவர்  ஹெய்லி ஒகின்ஸ் (வயது 17). இவளை ஹட்சின்கன் கில்போர்டு பிராஜெரியா என்ற வினோதமான முதுமை நோய் தாக்கியது. இதனால் அவளது உடல் தோல் சுருங்கி,  முகம் சிறிய தாகியது. 10 மடங்கு கூடுதலாக  104 வயது மூதாட்டி போன்று தோற்றத்துக்கு மாறினாள்.

எனவே அவளை ஆஸ்பத்திரியில்  அனுமதித்து சிகிச்சை  அளித்தனர். ஆனால் டாக்டர்களால் இந்த நோய் தாக்கிய காரணத்தை கண்டறிய முடியவில்லை. எனவே குணப்படுத்தவும் முடியவில்லை. அவள் 13 வயதிலேயே இறந்து விடுவாள் என்று டாக்டர்கள்  தெரிவித்து விட்டனர். அதைத்தொடர்ந்து அவள் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றாள்.

இதனால் கூடுதலாக 4 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தாள். இந்த நிலையில் சமீபத்தில் சிறுமி ஹெய்லி
மரணம் அடைந்தாள்.

அவரது மரணம் குறித்து அறிந்த பல பிரபலங்கள்  இரங்கல் தெரிவித்து உள்ளனர். சஸ்டின் பைபர், நிகோலா ரோபார்ட்,நாதன் ஸ்கைஸ், உள்பட பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments