Subscribe Us

header ads

உபுண்டு [UBUNTU] ஒரு அழகான கதை :



ஒரு மானுடவியலாளர் [anthropologist] ஆப்ரிக்க பழங்குடியின சிறுவர்களுக்காக ஒரு போட்டி நடத்தினார்.

அவர் ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பி ஒரு மரத்தின் கீழ் வைத்தார்.

அந்தச் சிறுவர்களை அந்த மரத்திலிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி வரிசையாக நிற்க வைத்தார்.

யார் முதலில் அந்த மரத்தை தொடுகிறாரோ அவர்களுக்கு அந்த கூடை பழம் முழுவதும் பரிசாகத் தரப்படும் என்று அறிவித்தார்.

அவர் அந்த சிறுவர்களை தயார் நிலையில் வைத்து விசில் ஊதினார். அப்பொழுது அந்தச் சிறுவர்கள் என்ன செய்தனர் தெரியுமா?

அவர்கள் அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஒன்றாக ஓடி மரத்தை அடைந்து, அந்தப் பழங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினர்.

அந்த மானுடவியலாளர் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள்? என வினவினார்.

அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் "உபுண்டு எனக் குரல் எழுப்பினர். அதற்கு அர்த்தம் "பிறர் சோகத்துடன் இருக்கும்போது எப்படி ஒருவர் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும்?

"உபுண்டு" என்பதன் பொருள் "நான் என்றால் அது நானல்ல! நாங்கள்!!

[ I AM BECAUSE, WE ARE !"]

நாமும் அந்த ஆப்ரிக்க சிறுவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது.!!

Post a Comment

0 Comments