Subscribe Us

header ads

The Puttalam Times 2-ம் வருட நிறைவும் வலைத்தளம் பதிவேற்றமும்

-TPT MEDIA-


'The Puttalam Times' (TPT) முகநூல் குழும (FB group)-ன் நீட்சியான www.theputtalamtimes.com வலைத்தளம் நேற்று (2015.03.13) வெள்ளிக்கிழமை பி.ப. 4.30 மணி முதல் புத்தளம், மன்னார் வீதி நெனசல (அறிவகம்) நடைபெற்ற எளிமையான வைபவத்தில் உத்தியோகபூர்வமாக பதிவேற்றம் செய்யப்பட்டது. 

TPT முகாமைத்துவ உறுப்பினர் எம்.டி. ரினாஸ் முஹம்மத் வரவேற்புரை நிகழ்த்தி வைபவத்தை ஆரம்பித்துவைத்தார். ஊடகவியல் பாடநெறியை நடத்தும் எம்.எச். முஹம்மத் ஊடகவியல் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.

TPT-யின் 2-ம் வருட நிறைவு கொண்டாடப்பட்ட இவ் வைபவத்தில் 2013 மார்ச் 13-ம் திகதி TPT முகநூல் குழுமத்தை ஸ்தாபித்த, தற்போது வெளிநாடுகளில் தொழில்புரியும் Mohamed Ishram, A.W. Mohamed Mahroof ஆகியோர் நன்றியுடன் நினைவுகூறப்பட்டனர்.


TPT வலைத்தளத்தை புத்தளத்தில் Trendsetter (புதிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்) எனக் கருதக் கூடிய நால்வர் பதிவேற்றம்செய்து வைத்தனர். அவர்கள் முறையே, ஏ.எல்.எம். அஸாரூக் (Secretary, Friends of Insight [Puttalam Circle]), ஏ.கே.எம். அப்ராஸ் (Director, i-Soft College), எம்.எச். முஹம்மத் (Dip. Journalism - College of Journalism), ஹஸ்னி அஹமத் (Dip. Journalism (Sri Lanka Television Training Institute) ஆகியோர் ஆவர்.


TPT-யின் மூலம் நடத்தப்படவுள்ள 'Photography and Media Journalism' (ஒளிப்படமும் ஊடகவியலும்) கற்கைநெறியில் இணைந்துகொள்ள வருகை தந்தவர்கள் பதிவுசெய்யப்பட்டனர். இக் கற்கையின் ஒளிப்படத்துறை பாடத்தை ஹஸ்னி அஹமத் நடத்துவார்.


-HISHAM PX-

Post a Comment

0 Comments