ஜனாதிபதியாக தெரிவான பின்னர் யாழ்ப்பாணத்துக்கு முதன்முறையாக நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்றிருந்தனர்.
இதேவேளை குறித்த ஜனாதிபதி மாளிகை வெகு விரைவில் மக்கள் உடமையாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால இதன்போது உறுதியளித்துள்ளார்.
0 Comments