Subscribe Us

header ads

General சரத் பொன்சேகா - இலங்கையில் முதலாவது Field Marshal


உலகில் இராணுவ அதிகாரியொருவருக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவப் பதவியான Field Marshal (ஃபீல்டு மார்ஷல்) பதவி, இலங்கையின் முன்னாள் முப்படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 22-ம் திகதி இராணுவ தலைமையகத்தில் இக் கௌரவப் பதவி வழங்கும் நிகழ்வு இடம்பெறும். இச் சிறப்பு நிகழ்வுக்கான மரியாதை அணிவகுப்பு பயிற்சிகளில் இராணுவத்தினர் தற்போது ஈடுபடுகின்றனர்.
போரின்போது தன்னுயிரைத் துச்சமென மதித்து சிறப்பான அர்ப்பணிப்புக்களை செய்த இராணுவ அதிகாரியொருவருக்கு வழங்கப்படும் அதிஉயர் கௌரவமான பீல்டு மார்ஷல் பதவியை இலங்கையின் இராணுவ அதிகாரியொருவர் பெற்றுக்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இப் பதவியின் பின்னர், ஜெனரல் சரத் பொன்சேகா, ஐந்து நட்சத்திரங்கள் அணிவிக்கப்படுவார்

-TPT-

Post a Comment

0 Comments