Subscribe Us

header ads

ஐ.தே.கவில் போட்டியிட முயற்சிக்கும் கெஹெலிய, அருந்திக, மனுஷ


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளனர்.
சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.கவின் ஊடக பேச்சாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பமளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 3 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளனர் என ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments