அதுவும் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொபைல் போன் புரட்சியைத் தொடர்ந்து பெரும்பாலும் பெண்களின் முதல் துணை மொபைல் போன்தான்! ஹேண்ட் பேக்கை விட பல மடங்கு விஷயங்களை மொபைல் போனில் வைத்திருப்பார்கள் பெண்கள்! அதில் தான் அதிகப் பிரைவஸியை அவர்கள் மெய்ண்டெய்ன் பண்ணி வைத்திருப்பார்கள்.
தங்கள் போனில் விஷயம் இல்லாவிட்டாலும், அதை ஒரு மர்மமான பொருளைப் போன்றே பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பெண்கள். நீங்கள் எவ்வளவு தான் சிரத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய மொபைல் போனைத் தொடுவதை மட்டும் அவர்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்.
அதை வேறு யார் தொட்டாலும் பெண்களுக்குப் பயங்கரக் கோபம் வந்துவிடும். பெண்களின் மொபைல் போனை ஏன் தொடக்கூடாது என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்
• உங்கள் கேர்ள் ஃபிரண்டின் மொபைலை நீங்கள் நோண்டுவதை அவர்கள் பார்த்து விட்டால், பிரைவஸி போய்விட்டதைப் போலும், தன்னை யாரோ கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் நினைப்பார்கள். மேலும் அவர்களிடம் உங்கள் மேலுள்ள நம்பிக்கையும் போய்விடும்.
• தம்முடைய நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ பெண்கள் படு குழந்தைத்தனமாகவும், வெகுளித்தனமாகவும் சாட் செய்திருப்பார்கள். அவற்றையெல்லாம் பார்த்து நீங்கள் கேலி, கிண்டல் செய்வீர்கள் என்ற வெட்கம் காரணமாகவும் அவர்களுடைய மொபைலை நீங்கள் தொடுவதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
• தம் தொழில் அல்லது அலுவலகம் தொடர்பான பல விஷயங்களைப் பெண்கள் தம் மொபைலில் சேகரித்து வைத்திருப்பார்கள். அவை தொலைந்து போனால் அல்லது திருட்டுப் போனால ஏராளமான நஷ்டம் ஏற்படும் சூழல் இருக்கும் நிலையில், அதைத் தொட அவர்கள் உங்களை அனுமதிக்கவே மாட்டார்கள். இது தொடர்பான ஒரு மோசமான முன் அனுபவம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
• பெரும்பாலான பெண்கள் பண விஷயத்தில் தன் காதலன் அல்லது கணவரிடம் எச்சரிக்கையாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தங்கள் போனில் வங்கிக் கணக்கு தொடர்பான விஷயங்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் நிலையில், அந்த போனை யாரும் டச் பண்ணக் கூட முடியாது!
0 Comments