பௌத்த ஆன்மீக தலைவர் தலாய் லாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள இலங்கை மகாபோதியின் தலைவர் பனகல உபதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இந்தியாவில் இடம்பெற்று வருகின்றன.
தலாய் லாமாவை இலங்கைக்கு வரவழைப்பதற்காக நேற்று பௌத்த உயர்பிக்கு ஒருவர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர் தலாய் லாமாவை இலங்கைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோதும் அரசியல் காரணங்களால் அது முடியாமல் போனது என்று அந்த பௌத்த பிக்கு கூறியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தமையே இதற்கான காரணமாகும்.
தலாய் லாமா சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments