Subscribe Us

header ads

ரெய்னாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக்கோரி தவமிருந்த ரசிகை


இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் ரெய்னாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கோரி இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே தவமிருந்துள்ளார்.

உலகக்கிண்ண லீக் போட்டியில் சிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அதிரடியில் மிரட்டிய ரெய்னா சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இவரது ஆட்டத்தை பார்த்து அசந்து போன வைஷ்னவி என்ற இந்திய கிரிக்கெட் ரசிகையொருவர் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு செற்று வெளியில் காத்திருந்துள்ளார்.
இதேவேளை, குறித்த ரசிகை கையில் `Raina, make me your dulhaniya’ என்று எழுதிய ஒரு சுலோக அட்டையுடன் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் ஹொட்டலுக்கு வெளியே ரெய்னாவின் வருகைக்காக தவமிருந்துள்ளார்.
இது குறித்து ரசிகையான வைஷ்னவி தெரிவிக்கையில்,
நான் 2 மணி நேரமாக ஹோட்டலுக்கு வெளியில் ரெய்னாவின் வருகைக்காக காத்திருக்கிறேன். காவலாளியிடம் அவர் எப்போது வருவார் என்று கேட்டுப்பார்தேன். அவர் என்னை உள்ளே விட மறுத்து விட்டார் .
மேலும் எனது ஆதரவு எப்போதும் ரெய்னாவிற்கு உண்டு என்றும், இந்திய அணி கண்டிப்பாக இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments