உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை
(16/03/2015) இரவு முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் ,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, நவசமாஜ கட்சி ஆகிய கட்சிகளை
பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments