Subscribe Us

header ads

அமைச்சரவைப் பேச்சாளர் ராஜிதவின் கருத்தை மறுக்கும் அகில விராஜ்


ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்தை மறுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறும் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறையின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும் என ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த கருத்தை அகில விராஜ் காரியவசம் நிராகரித்துள்ளார். தேர்தல் முறையில் மாற்றம் தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்க வில்லை என அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 100 நாள் திட்டத்தின் பின்னர் தேர்தலை நடத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். 100 நாள் திட்ட நிறைவின் பின்னர் சில நேரங்களில் ஒரு சில தினங்கள தாமதித்தாலும் தேர்தல் விரைவில் நடைபெறும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத் திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாகவும், குறைத்தோ கூட்டியோ ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதியாகவே மைத்திரிபால சிறிசேன திகழ்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவை தங்களது ஜனாதிபதியாக கூறி வருவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments